
தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபானக் கடைகளிலும் விற்பனை செய்யப்படும் மதுபானங்களுக்கு வாடிக்கையாளர்களுக்குக் கட்டாயம் ரசீது வழங்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்யப்படுவதாக ஜி. தேவராஜன் என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.கே. இளந்திரையன், ரசீது புத்தகங்களை முறையாகப் பராமரிக்கவும் டாஸ்மாக் நிர்வாகத்திற்கு அறிவுறுத்தியுள்ளார்.
இந்த உத்தரவை அமல்படுத்தியது குறித்து டாஸ்மாக் நிர்வாகம் நாளை (ஆகஸ்ட் 7) அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டு விசாரணையைத் தள்ளிவைத்துள்ளார்.