
25 சதவீதத்திற்கும் அதிக உறுப்பு நாடுகளைக் கொண்டுள்ள போதிலும், ஆப்பிரிக்காவுக்கு பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர இடம் இல்லை என கென்ய அதிபர் வில்லியம் ரூடோ வேதனை தெரிவித்தார்.
ஐ.நா. பொது விவாதத்தில் பேசிய அவர், போர்கள் தொடர்பான விவகாரங்களில் 188 நாடுகளுக்கு இல்லாத நிரந்தர அதிகாரம் 5 நாடுகளிடம் மட்டுமே இருப்பதாகக் கூறினார்.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் சீர்திருத்தம் தொடர்பாக அரசுகளுக்கு இடையில் பேச்சுவார்த்தைகள் தொடங்கி 17 ஆண்டுகள் ஆகிவிட்டதாக அவர் தெரிவித்தார்.