
நடிகர் தனுஷின் ரசிகர் மன்றத்தில் நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களுக்கு உட்பட்ட சட்டமன்றத் தொகுதிகளுக்கு புதிய பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
திருநெல்வேலி, ஆலங்குளம், நாங்குநேரி உள்ளிட்ட பகுதிகளில் தனுஷ் ரசிகர் மன்றக் கொடியுடன் கூடிய சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு வருவது அரசியல் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.
ரசிகர் மன்றத்தின் சமூக செயல்பாடுகளை ஒருங்கிணைக்கவே இந்த நியமனங்கள் செய்யப்படுவதாகக் கூறப்பட்டாலும், தனுஷின் அரசியல் வருகை குறித்த எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.