
மாணவர்கள் வீட்டுப்பாடங்களைச் செய்ய ஏ.ஐ. தொழில்நுட்பத்தைத் தவறாகப் பயன்படுத்துவதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, பள்ளி மாணவர் கணக்குகளில் ஜெமினி உள்ளிட்ட ஏ.ஐ. வசதிகளை கூகுள் முடக்க உள்ளது.
இந்த புதிய கட்டுப்பாட்டின்படி, பள்ளி நிர்வாகம் விரும்பினால் மட்டுமே ஏ.ஐ. கருவிகளை ஆன் செய்ய முடியும் என்ற தேர்வை கூகுள் வழங்கியுள்ளது.
இந்தக் கட்டுப்பாடு முதற்கட்டமாக அமெரிக்காவில் அமல்படுத்தப்பட உள்ளதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.