
லோக்சபா தொகுதி மறுவரையறை மசோதாவை ஆதரிக்கும் கட்சிகள் 21-ம் நூற்றாண்டின் எட்டப்பர்கள் என ராகுல் காந்தி விமர்சித்தது திமுக-காங்கிரஸ் இடையே கருத்து மோதலை உருவாக்கியுள்ளது.
ராகுலின் விமர்சனத்திற்கு பதிலளித்த திமுக எம்.பி. தயாநிதி, காவிரி உரிமை குறித்து பேசாதவர்கள் துரோகிகள் என அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் தொகுதி மறுசீரமைப்பு மசோதா தாக்கல் செய்யப்பட வாய்ப்புள்ள நிலையில், இக்கட்சிகளுக்கு இடையிலான மோதல் சமூக வலைதளங்களில் தீவிரமடைந்துள்ளது.