
கோவையில் உள்ள இந்துஸ்தான் தொழில்நுட்பக் கல்லூரியில் மாணவர்களுக்கு ஜப்பானிய மொழி மற்றும் கலாசாரம் குறித்த அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றது.
கல்லூரி முதல்வர் நடராஜன் வழிகாட்டுதலின் கீழ் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், ஜிங்லாங் எடு டெக் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் செயல் இயக்குநர் கோபாலகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
வெளிநாட்டு மொழிகளைக் கற்றுக்கொள்வதன் மூலம் சர்வதேசக் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வாய்ப்புகளை அறிந்துகொள்ள முடியும் என மாணவர்களுக்கு இந்நிகழ்ச்சியில் வலியுறுத்தப்பட்டது.