
அறிமுக இயக்குநர் சஜீவ் பழூர் இயக்கத்தில் நிமிஷா சஜயன் மற்றும் கருணாஸ் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள 'என்ன விலை' திரைப்படம் துருக்கியின் கையா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட தேர்வாகியுள்ளது.
ராமேஸ்வரம், சென்னை, பாண்டிச்சேரி மற்றும் கொச்சி உள்ளிட்ட 56 இடங்களில் படமாக்கப்பட்ட இக்குடும்ப த்ரில்லர் திரைப்படம் வரும் செப்டம்பர் மாதத்தில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
ஏற்கனவே தாதா சாகேப் பால்கே திரைப்பட விழாவில் சிறந்த திரைக்கதைக்கான விருது உட்பட மொத்தம் நான்கு சர்வதேச விருதுகளை இத்திரைப்படம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.