
லாரன்ஸ் அறக்கட்டளை 20 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளதை முன்னிட்டு, கிராமப்புற ஏழை தாய்மார்களுக்கு இலவசமாக பட்டுப்புடவைகள் வழங்கும் புதிய திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக 5000 பட்டுப்புடவைகளை வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக நடிகர் ராகவா லாரன்ஸ் இன்ஸ்டாகிராம் மூலம் தெரிவித்தார்.
அவரது பிறந்தநாளான அக்டோபர் 29 அன்று அவர் வளர்ந்த இடமான ராயபுரத்தில் இந்தத் திட்டம் தொடங்கப்படவுள்ளது.