
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், 73, நீதிமன்ற உத்தரவுப்படி மருத்துவ பரிசோதனைகள் முடிந்த நிலையில் மீண்டும் அடியாலா சிறையில் அடைக்கப்பட்டார்.
இஸ்லாமாபாத்தில் உள்ள ஷிபா சர்வதேச மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவரை கண், இதய நோய் மற்றும் பொது மருத்துவர்கள் அடங்கிய குழுவினர் பரிசோதித்தனர்.
இம்ரான் கான் உடல்நலத்துடன் இருப்பதாக மருத்துவக் குழுவினர் தெரிவித்ததை அடுத்து, நேற்று அதிகாலை 5:00 மணிக்கு அவர் மீண்டும் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.