கமல்ஹாசனின் புதிய படத்திற்கு மீண்டும் சூட்டப்பட்டுள்ள ‘சண்டியர்’ தலைப்புக்கு புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இளைஞர்கள் மனதில் வன்முறையின் ரத்த வாசனை வீசும் வகையில் தலைப்பு இருப்பதாகக் கூறி இயக்குநர் லெனின் பாரதி உள்ளிட்டோரும் விமர்சித்துள்ளனர்.
இதன் மூலம் 22 ஆண்டுகளுக்குப் பிறகு இத்திரைப்படத்தின் தலைப்பு மீண்டும் விவாதப் பொருளாகியுள்ளது.