
உத்தரப் பிரதேச மாநிலம் பிருந்தாவனத்தில் உள்ள பிரேமானந்த் மஹாராஜ் ஆசிரமத்தில் சீடர் ஒருவர் உயிரிழந்ததை அடுத்து ஆசிரமம் சர்ச்சையில் சிக்கியது.
ஆசிரமத்தின் செல்வாக்கை அதிகரிக்க விராட் கோலிக்கு ரூ.5 கோடி கொடுக்கப்பட்டு அழைத்து வரப்பட்டதாகக் கூறப்பட்ட குற்றச்சாட்டை கோலி தரப்பு திட்டவட்டமாக மறுத்துள்ளது.
பிரேமானந்த் மஹாராஜ் மீது இருந்த பக்தி மற்றும் நம்பிக்கையின் காரணமாகவே விராட் கோலியும் அவரது மனைவியும் ஆசிரமத்திற்குச் சென்று வந்ததாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.