
ஆகஸ்ட் 14 முதல் 30 வரை பெல்ஜியம் மற்றும் நெதர்லாந்தில் நடைபெறும் 16-வது உலகக் கோப்பை ஹாக்கி தொடரில் புதிய போட்டி முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்திய அணி 'டி' பிரிவில் இடம் பெற்றுள்ள நிலையில், சுதந்திர தினமான ஆகஸ்ட் 15-ம் தேதி வேல்ஸ் அணியுடன் தனது முதல் போட்டியில் மோதுகிறது.
இந்தத் தொடரில் 34 வயதான மன்பிரீத் சிங் 417 போட்டிகளில் பங்கேற்ற அனுபவத்துடன் இந்திய அணியின் முக்கிய வீரராகக் களமிறங்குகிறார்.