
நடிகர் யாஷ் நடிப்பில் கீது மோகந்தாஸ் இயக்கத்தில் கடந்த 26ஆம் தேதி வெளியான 'டாக்சிக்' திரைப்படம், உலக அளவில் 4 நாட்களில் ரூ. 255 கோடி வசூலித்துள்ளது.
ரூ. 500 கோடி பட்ஜெட்டில் கேங்ஸ்டர் டிராமா பாணியில் உருவாகியுள்ள இப்படத்தில் நயன்தாரா, கியாரா அத்வானி உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
கேவிஎன் புரொடக்சன்ஸ் தயாரித்துள்ள இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ள நிலையில், வார விடுமுறை நாட்களுக்குப் பிறகு முதலீட்டுத் தொகையை ஈட்டுமா என படக்குழுவினர் எதிர்பார்த்துள்ளனர்.