ஹிந்து மதக் கடவுளான ஐயப்பனை மையப்படுத்தி விஷ்ணு சசி சங்கர் இயக்கத்தில் வைபவ் நடிப்பில் உருவாகியுள்ள 'மணிகண்டா' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.
இப்படத்தில் மீனாட்சி கோவிந்தராஜன், அரவிந்த் ஆகாஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்; மேலும், இப்படத்திற்கு பிரேம்ஜி இசையமைத்துள்ளார்.
ஐயப்பன் வேடத்தில் வைபவ் நின்றிருக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருடன், படம் வருகிற டிசம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.