ஐக்கிய அரபு எமிரேட்சின் துபாய் ஜெபல் அலி தொழிற்பேட்டையில் உள்ள எரிபொருள் கிடங்கு பகுதியில் நேற்று அதிகாலை 20 நிமிட இடைவெளியில் 7 முறை குண்டுகள் வெடித்தன.
தாக்கப்பட்ட இடங்களில் இருந்து கரும்புகை வெளியேறிய நிலையில், உயிரிழப்பு அல்லது சேதம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.
ஈரான் ஆதரவு பெற்ற ஏமனின் ஹவுதி பயங்கரவாத அமைப்பு இந்தத் தாக்குதலை நடத்தியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.