
சவுதி அரேபியாவில் பணிபுரியும் இலங்கை தமிழரான சிவராஜா அனோஜன் மீது கீழமை நீதிமன்றத்தில் 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், மேல்முறையீட்டு வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இலங்கையை சேர்ந்த முஸ்லிம் ஒருவர் சிவபெருமான் குறித்து அவதூறாக பதிவிட்டதற்கு ஆட்சேபம் தெரிவித்த அனோஜன், இஸ்லாம் தொடர்பான கருத்துகளை பதிவிட்டதாகக் கூறப்படுகிறது.
அனோஜனின் மரண தண்டனையை ரத்து செய்து பொதுமன்னிப்பு வழங்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதமரும் வெளியுறவுத்துறையும் சவுதி அரேபிய அரசுடன் பேச வேண்டும் என ஹிந்து முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது.