
டென்மார்க் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டியின் ஆண்கள் ஒற்றையர் முதல் சுற்றில் இந்தியாவின் ஆயுஷ் ஷெட்டி இந்தோனேசியாவின் ஆல்வி பர்ஹானிடம் தோல்வியடைந்தார்.
பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் உன்னதி ஹூடா சீனாவின் கியான் ஜி ஹானிடம் போராடி வீழ்ந்தார்.
ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி ஜோடி சீனாவின் ஹீ ஜி டிங் மற்றும் ரென் ஜியாங் யூ இணையிடம் தோல்வியைத் தழுவியது.