
யஷ் நடிப்பில் வெளியான 'டாக்ஸிக்' திரைப்படம் முதல் நாளில் ரூ.101.10 கோடி வசூலித்த நிலையில், இரண்டாவது நாளில் வசூல் 75 சதவீதம் சரிந்து ரூ.22.08 கோடியாக குறைந்துள்ளது.
இரண்டு நாட்கள் முடிவில் இப்படம் இந்தியாவில் மொத்தம் ரூ.123.18 கோடி நிகர வசூலையும், ரூ.146.80 கோடி மொத்த வசூலையும் எட்டியுள்ளது.
கீது மோகன்தாஸ் இயக்கத்தில் நயன்தாரா, கியாரா அத்வானி உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படம் 'ஏ' சான்றிதழ் பெற்றுள்ளது.