
சீனாவின் ஜெஜியாங் மாகாணத்தில் உலகின் மிக நீளமான கடல்வழி ரயில் பாலத்தின் கப்பல் போக்குவரத்துக்கான மூன்று வழித்தடங்களில் உயர் கோபுரங்கள் அமைக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளன.
29.2 கிலோமீட்டர் நீளம் கொண்ட இந்த ஹாங்சோ வளைகுடா அதிவேக ரயில் பாதையில் ரயில்கள் அதிகபட்சம் 350 கி.மீ வேகத்தில் இயக்கப்படும்.
இந்த பிரம்மாண்டமான கட்டுமானப் பணிகள் நிறைவடைந்ததைக் குறிக்கும் வகையில் வண்ணப்புகை வெளியிடப்பட்ட நிலையில், 2027-ஆம் ஆண்டு பாலம் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.