
கேரள காவல்துறை சார்பில் சைபர் குற்றங்களைத் தடுக்க உருவாக்கப்பட்ட 'கிளிக்' திட்டத்தின் கேப்டனாக நடிகர் மம்மூட்டி நியமிக்கப்பட்டுள்ளார்.
இணையத்தை பொறுப்புடன் கையாள்வது மற்றும் சைபர் மோசடிகளில் இருந்து பாதுகாப்பது குறித்து மம்மூட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
2027-ஆம் ஆண்டுக்குள் கேரளாவை சைபர் அச்சுறுத்தல்களைச் சமாளிக்கும் திறன் கொண்ட மாநிலமாக மாற்றுவதே இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.