
2023 நவம்பர் 22-ம் தேதி இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் உயிரிழந்த 112 பேரின் உடல்கள் மீட்கப்பட்டு கூட்டு இறுதிச் சடங்கு நடைபெற்றது.
மீட்கப்பட்டவர்களில் 40 பேர் குழந்தைகள் என்றும், இன்னும் 150 பேரின் உடல்கள் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் என்றும் ஹமாஸ் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
காசா பிராந்திய சுகாதாரத்துறை தகவல்படி, இஸ்ரேல் தாக்குதலில் சுமார் 7,400 பேரின் உடல்கள் இன்னும் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளதாக அஞ்சப்படுகிறது.