
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ஈரான் உடனான போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு இதுவே கடைசி வாய்ப்பு என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஹார்முஸ் ஜலசந்தி தற்போது அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் உள்ளதாகவும், முறையான ஒப்பந்தம் அல்லது சரணடைதல் மட்டுமே தீர்வாக அமையும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
புதிய அமைதி ஒப்பந்தத்தில் ஹார்முஸ் ஜலசந்தியில் தடையற்ற வர்த்தகம் மற்றும் அணுசக்தி திட்டங்கள் மீதான தடைகள் முக்கிய அம்சங்களாக முன்வைக்கப்பட்டுள்ளன.