
அமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியாவில் வீசி வரும் பலத்த காற்று காரணமாக காட்டுத்தீ மிக வேகமாகப் பரவி தீவிரமடைந்துள்ளது.
இந்த இயற்கை சீற்றத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தங்கள் வீடுகளை விட்டு அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.
பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பல்லாயிரக்கணக்கான மக்கள் தற்போது இருளில் தவித்து வருகின்றனர்.