
ஸ்ரீராம் கார்த்திக் மற்றும் ஆலிஷா மிராணி முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள 'ஆகாயம்' திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து, தற்போது ரிலீஸ் வேலைகள் நடந்து வருவதாக இயக்குநர் 'தினந்தோறும்' நாகராஜ் தெரிவித்துள்ளார்.
டெல்டா டாக்கீஸ் சார்பில் ஜெயச்சந்திரன் மற்றும் கார்த்திகா தேவி இணைந்து தயாரித்துள்ள இத்திரைப்படம், மது பழக்கத்திற்கு அடிமையான குட்டி என்ற நேர்மையான இளைஞனின் வாழ்க்கையையும் காதலையும் மையமாகக் கொண்டது.
கன்னிமாடம் படத்தில் நடித்த ஸ்ரீராம் கார்த்திக் மற்றும் சின்னத்திரை நடிகர் ஸ்ரீதேவா உள்ளிட்ட சிலருக்கு முன்கூட்டியே திரைக்கதை வழங்கி நடிப்புப் பயிற்சி அளிக்கப்பட்டதாக இயக்குநர் குறிப்பிட்டுள்ளார்.