
தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமாரை சஸ்பெண்ட் செய்யக்கோரியும், தேர்தல் கமிஷனர்களின் ஒப்புதல் இல்லாமல் எடுக்கப்பட்ட முடிவுகளை எதிர்த்தும் தொடரப்பட்ட பொதுநல மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.
அரசியலமைப்பு சட்டப்பிரிவு 342-ன் படி முடிவுகள் ஒருமனதாகவோ அல்லது பெரும்பான்மை அடிப்படையிலோ எடுக்கப்பட வேண்டும் என்றும், ஞானேஷ் குமார் தனிநபராக சட்டவிரோதமாக அதிகாரங்களைப் பயன்படுத்தினாரா என்பதை ஆய்வு செய்ய வேண்டும் என்றும் மனுவில் கோரப்பட்டுள்ளது.
தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வில் மூத்த வழக்கறிஞர் விகாஸ் சிங் அவசர விசாரணை கோரியதை ஏற்று, இந்த மனுவை அடுத்த வாரம் விசாரணைக்கு பட்டியலிட நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.