
செர்பியாவில் இருந்து போலாந்துக்கு 59 பயணிகளுடன் சென்ற சுற்றுலா பேருந்து, ஹங்கேரியின் புடாபெஸ்ட் அருகே கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 12 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இந்த கோர விபத்தில் 10 பேர் படுகாயமடைந்துள்ள நிலையில், அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து நடந்த மிசொகிரடெஸ் நகர் நெடுஞ்சாலையில் போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், விபத்துக்கான காரணம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.