
நெடுந்தூர தனியார் பேருந்துகளில் சாரதிகளின் பாதுகாப்பற்ற செயல்களைக் கண்காணிக்க செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக 10 பேருந்துகளில் பொருத்தப்பட்டுள்ள இந்த கருவி, சாரதி தூக்கக்கலக்கம் அல்லது தொலைபேசி பயன்பாட்டில் இருந்தால் குரல் வழி எச்சரிக்கை விடுக்கிறது.
கொழும்பு பெஸ்டியன் மாவத்தை பேருந்து நிலையத்தில் தொடங்கப்பட்ட இந்த முன்னோடித் திட்டம், வெற்றி பெற்றால் நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படும்.