
சென்னை மாநகராட்சியில் பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 16 நாட்களாக நடைபெற்று வந்த தூய்மைப் பணியாளர்களின் போராட்டம், அமைச்சர்களுடன் நடந்த பேச்சுவார்த்தைக்குப் பின் நேற்று வாபஸ் பெறப்பட்டது.
அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, நிர்மல்குமார், ராஜ்மோகன் மற்றும் கமிஷனர் சமீரன் ஆகியோர் நடத்திய சமரசப் பேச்சில், 10 கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
முதற்கட்டமாக இம்மாத இறுதிக்குள் 160 குப்பை சேகரிக்கும் வாகனங்கள் மற்றும் பணியாளர்களுக்குத் தேவையான உபகரணங்கள் வழங்கப்படும் என்றும், அக்டோபர் 3-ல் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.