
முதல்வரை விமர்சித்ததாக தாராபுரம் நாதக வேட்பாளர் கார்த்திகாவை கைது செய்த தவெக அரசு, நயினார் நாகேந்திரனை ஏன் கைது செய்யவில்லை என திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார்.
தவெக ஆட்சியில் பெண்களுக்கும் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரித்து இருப்பதாகவும், தவெக நிர்வாகிகளின் வீட்டிலிருந்தே போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதை திசை திருப்புவதற்காகவே கார்த்திகா கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
செஞ்சியில் குழந்தை காணாமல் போய் 10 நாட்களுக்கு மேலாகியும் மற்றும் ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் செவிலியர் கொலை வழக்கிலும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.