
இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 2 சதங்கள் உட்பட 328 ரன்கள் குவித்து தொடர் நாயகன் விருது வென்ற தேவ்தத் படிக்கல், தரவரிசையில் 54-வது இடத்திற்கு முன்னேறினார்.
இந்திய கேப்டன் சுப்மன் கில் 709 புள்ளிகளுடன் 7-வது இடத்திலிருந்து 9-வது இடத்திற்கு சரிந்துள்ளார், அதேசமயம் பும்ரா பவுலர்கள் தரவரிசையில் 3-வது இடத்திற்கு தள்ளப்பட்டார்.
நியூசிலாந்தின் மாட் ஹென்றி 861 புள்ளிகளுடன் பவுலர்கள் தரவரிசையில் 2-வது இடத்திற்கு முன்னேறியுள்ள நிலையில், ஆஸ்திரேலியாவின் ஸ்டார்க் முதலிடத்தில் நீடிக்கிறார்.