செயற்கை முறை கருத்தரிப்பு சிகிச்சையில் தோல்வி அடையும் பெண்களுக்கு, கர்ப்பப்பை குறைபாடுகளைத் துல்லியமாகக் கண்டறிய சலைன் இன்ஃப்யூசன் சோனோகிராபி (SIS) ஸ்கேன் பரிசோதனையை மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
இந்த பரிசோதனையின் போது உள்ளே செலுத்தப்படும் பிரத்யேக திரவம், கருப்பையகம் மற்றும் கருப்பைக் குழியில் உள்ள மிகச் சிறிய பாதிப்புகளையும் கண்டறிய உதவுகிறது.
சாதாரண டிரான்ஸ்வஜைனல் ஸ்கேன் மற்றும் ஹிஸ்டரோசல்பிங்கோகிராம் ஆகியவற்றில் தெரியாத பாதிப்புகளை இந்த நவீன தொழில்நுட்பம் கண்டறிவதால் தம்பதியரிடையே வரவேற்பு பெற்றுள்ளது.