
மாரியப்பன் சின்னா இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் மற்றும் கயாடு லோஹர் நடிப்பில் வெளியான 'இம்மார்ட்டல்' திரைப்படம், வெளியான 5 நாட்களில் 5 கோடியே 72 லட்சம் ரூபாயை வசூலித்துள்ளது.
Sacnilk இணையதளத் தகவல்படி, இப்படம் ஐந்தாவது நாளில் மட்டும் 60 லட்சம் ரூபாய் வசூலித்துள்ள நிலையில், சராசரியாக தினமும் 60 லட்சத்திற்கு குறையாமல் வசூல் ஈட்டி வருகிறது.
ஹாரர் மற்றும் ஃபேன்டஸி ஜானரில் உருவாகியுள்ள இப்படத்தின் சிஜி பணிகள் மற்றும் சாம் சி.எஸ்ஸின் இசை ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளதால் வசூல் மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.