
அமெரிக்காவின் செயின்ட் லுாயிசில் நடக்கும் சின்க்யுபீல்டு கோப்பை செஸ் தொடரின் எட்டாவது சுற்றில், பிரான்சின் மேக்சிம் வாசியரை பிரக்ஞானந்தா வீழ்த்தினார்.
இந்த வெற்றியின் மூலம் 9.5 புள்ளிகள் கூடுதலாகப் பெற்று, 2759.5 புள்ளிகளுடன் அர்ஜுனை முந்தி இந்தியாவின் நம்பர்-1 செஸ் வீரராக பிரக்ஞானந்தா முன்னேறியுள்ளார்.
எட்டு சுற்று முடிவில் 5.0 புள்ளிகளுடன் பிரக்ஞானந்தா தொடரில் இரண்டாவது இடத்தில் உள்ளார், முதலிடத்தில் அமெரிக்காவின் வெஸ்லே 5.0 புள்ளிகளுடன் நீடிக்கிறார்.