
நியூசிலாந்து அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 சர்வதேச தொடரை இந்திய அணி 3-2 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது.
முதல் மூன்று போட்டிகளிலும் தொடர்ச்சியாக வெற்றி பெற்று 3-0 என்ற கணக்கில் இந்திய அணி தொடரை முன்கூட்டியே கைப்பற்றியது.
போட்டி முடிந்ததும் தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் வீரர்களைப் பாராட்டி, அணியின் ஒற்றுமை மற்றும் எதிர்காலப் போட்டிகளுக்கான தயாரிப்பு குறித்து அறிவுரைகளை வழங்கினார்.