
பொதுமக்களின் கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து, சென்னையில் சொத்து வரி மறுமதிப்பீடு செய்யும் நடவடிக்கையை மாநகராட்சி ஆணையர் ஜி.எஸ்.சமீரன் உடனடியாக நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளார்.
சென்னை மாநகராட்சியில் 13.30 லட்சத்திற்கும் அதிகமான சொத்து உரிமையாளர்கள் உள்ள நிலையில், வரி உயர்வு 100 முதல் 300 சதவீதம் வரை இருப்பதாக புகார்கள் எழுந்தன.
மாற்றியமைக்கப்பட்ட வரித் தொகைக்கு பதிலாக பழைய வரி முறையே மீண்டும் அமல்படுத்தப்படும் என்றும், ஏற்கனவே செலுத்தியவர்களுக்கு அடுத்த அரை ஆண்டுக்கான முன்பணமாக ஈடு செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.