Entertainment
சேலம் திரையரங்கில் மீசையை முறுக்கு 2 படத்தைக் காணச் சென்ற ஹிப் ஹாப் ஆதி

சேலம் திரையரங்கில் மீசையை முறுக்கு 2 படத்தைக் காணச் சென்ற ஹிப் ஹாப் ஆதி

polimernews1h
THE BRIEF
1

சேலம் கொண்டலாம்பட்டி திவ்யம் திரையரங்கில் தான் நாயகனாக நடித்த 'மீசையை முறுக்கு 2' திரைப்படத்தைக் காண நடிகர் ஹிப் ஹாப் ஆதி வருகை தந்தார்.

2

அவர் வருவதை அறிந்த நூற்றுக்கணக்கான ஆண் மற்றும் பெண் ரசிகர்கள் திரையரங்கின் நுழைவு வாயில்களில் அவரது காரை முற்றுகையிட்டனர்.

3

காரை விட்டு இறங்க முடியாத சூழல் ஏற்பட்டதால், கார்களின் மேற்கூரையைத் திறந்து வெளியே வந்து ரசிகர்களை நோக்கி கையசைத்துவிட்டு அவர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.