
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் ரெனால்ட் ட்ரைபர் மற்றும் நிசான் க்ராவைட் கார்களுக்குப் போட்டியாக, புதிய 7 சீட்டர் எம்பிவி காரை அறிமுகம் செய்ய மாருதி சுசூகி திட்டமிட்டுள்ளது.
சர்வதேச சந்தையில் உள்ள 5 சீட்டர் 'சுசூகி சோலியோ' மாடலின் அடிப்படையில், 1.2 லிட்டர் 3 சிலிண்டர் பெட்ரோல் ஹைப்ரிட் இன்ஜின் மற்றும் eCVT கியர்பாக்ஸ் கொண்ட 7 சீட்டர் காராக இது உருவாக்கப்படலாம்.
முந்தைய மாடல்கள் லிட்டருக்கு 32 கி.மீ வரை மைலேஜ் தந்த நிலையில், 'YVF' என்ற குறியீட்டுப் பெயர் கொண்ட இந்த புதிய எம்பிவி கார் 2028 அல்லது 2029 ஆம் ஆண்டில் இந்தியாவில் அறிமுகமாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.