
பெல்ஜியத்தின் வாவ்ரே நகரில் நடந்த உலக கோப்பை ஹாக்கி இறுதிப்போட்டியில், ஸ்பெயினை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ஜெர்மனி அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.
ஜெர்மனி வீரர் மிச்செல் ஸ்ட்ருதோப் 44-வது நிமிடத்தில் அடித்த கோல் மூலம், அந்த அணி 4-வது முறையாக உலக கோப்பையை கைப்பற்றி பாகிஸ்தானின் சாதனையை சமன் செய்தது.
மூன்றாவது இடத்திற்கான போட்டியில் அர்ஜென்டினா அணி 2-1 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்தை வீழ்த்தி, 2-வது முறையாக வெண்கலப் பதக்கத்தை வென்றது.