
மத்திய அரசின் 'வேளாண் உள்கட்டமைப்பு நிதி' திட்டத்தின் கீழ் விவசாயிகள் சொத்து அடமானம் இல்லாமல் அதிகபட்சம் ரூ. 2 கோடி வரை கடன் பெறலாம்.
இந்தத் திட்டத்தின் கீழ் கடனுதவி பெறும் பயனாளர்களுக்கு 9% வட்டி நிர்ணயிக்கப்படும் நிலையில், மத்திய அரசு 3% வட்டி மானியம் வழங்குகிறது.
கடன் திரும்பச் செலுத்த 7 ஆண்டுகள் வரை அவகாசம் வழங்கப்படுவதோடு, 6 முதல் 24 மாதங்கள் வரை வட்டி விடுமுறையும் அளிக்கப்படுகிறது.