
காங்கோ நாட்டில் பரவி வரும் எபோலா வைரஸ் தொற்றுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 2011 ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
தற்போது 4381 பேர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர், மேலும் 704 பேர் மருத்துவ கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கடந்த 3 வாரங்களில் மட்டும் பலி எண்ணிக்கை 2000-ஐ கடந்துள்ள நிலையில், தற்போதுள்ள தடுப்பூசிகள் மற்றும் மருந்துகள் இந்த வைரஸைக் கட்டுப்படுத்தப் போதிய பலன் அளிக்கவில்லை.