
நீலம் புரடக்ஷன்ஸ் மற்றும் பிர்லா ஸ்டூடியோஸ் தயாரிப்பில் மணிகண்டன் காவலதிகாரியாக நடிக்கும் 'மக்கள் காவலன்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
ப.ரஞ்சித்தின் உதவி இயக்குநர் சந்தோஷ் குமார் இயக்கும் இப்படத்திற்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைக்கிறார்.
அதிகாரத்துக்கு எதிரான ஒரு மனிதனின் போராட்டத்தை மையமாகக் கொண்டு இப்படம் உருவாகி வருவதாக படக்குழு தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளது.