
சட்டப்பேரவையில் பட்ஜெட் விவாதத்தின்போது, தனது ஆங்கில உச்சரிப்பு மற்றும் தமிழ் மொழி அறிவு குறித்து விமர்சித்த திமுக உறுப்பினர் ராஜேந்திரனுக்கு நிதியமைச்சர் மரியவில்சன் பதிலடி கொடுத்தார்.
தான் 25 முதல் 30 ஆண்டுகளாக கல்வித்துறையில் இருந்ததாகவும், கூடைப்பந்து விளையாட்டாளராக தாக்குதல் மற்றும் தற்காப்பு முறைகள் தனக்குத் தெரியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
உருவ கேலி மற்றும் மொழி கேலிகளை ஏற்க முடியாது என்று கூறிய அமைச்சர், மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் மக்களவையில் ஐந்து ஆண்டுகளாகப் பேசவில்லை என்பதையும் சுட்டிக்காட்டினார்.