
2027 ஒருநாள் உலகக் கோப்பைக்கு விராட் கோலி மற்றும் ரோகித் சர்மாவை தேர்வு செய்வதற்கு வயது தடையாக இருக்காது என பிசிசிஐ தலைவர் மிதுன் மன்ஹாஸ் தெரிவித்துள்ளார்.
அந்நேரத்திற்கான அவர்களின் உடற்தகுதி மற்றும் செயல்திறனே தேர்வுக்கான முக்கிய அளவுகோலாக இருக்க வேண்டும் என அவர் கூறினார்.
நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்தத் தொடர் அடுத்த ஆண்டு அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே மற்றும் நமீபியாவில் நடைபெறுகிறது.