
திருப்பூர் இடுவம்பாளையம் அரசுப்பள்ளியைச் சேர்ந்த 10 மாணவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று மருத்துவக் கல்விக்குத் தகுதி பெற்றுள்ளனர்.
வெற்றி அறக்கட்டளை சார்பில் தேர்ச்சி பெற்ற 10 மாணவர்களுக்கும் தலா 25,000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.
தேர்ச்சி பெற்றவர்களில் 9 பேர் மறுமுறை தேர்வு எழுதியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது, இவர்களுக்கு மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி பாராட்டு தெரிவித்தார்.