
மும்பை ஐஐடி வளாகத்தில் உள்ள தெருநாய்களைக் கண்காணிக்கவும், அவற்றின் உடல்நலத்தைப் பராமரிக்கவும் கழுத்தில் க்யூ ஆர் குறியீடு கொண்ட பட்டைகள் பொருத்தப்பட்டுள்ளன.
இந்த குறியீட்டை ஸ்கேன் செய்வதன் மூலம் நாயின் அடையாள எண், சுற்றித்திரியும் பகுதி மற்றும் தற்போதைய இருப்பிடம் போன்ற தகவல்களை அறிய முடியும்.
நாய்களுக்குச் செலுத்தப்பட்ட தடுப்பூசிகள் மற்றும் மருத்துவ சிகிச்சை விவரங்கள் டிஜிட்டல் முறையில் பதிவு செய்யப்பட்டு பராமரிப்பாளர்களுக்குத் தெரிவிக்கப்படுகிறது.