
நயன்தாரா மற்றும் கவின் நடிப்பில் வெளியாகியுள்ள 'ஹாய்' திரைப்படத்தின் 'சக்கரையே' என்ற வீடியோ பாடலை படக்குழுவினர் இன்று வெளியிட்டுள்ளனர்.
விஷ்ணு எடவன் இயக்கத்தில் ஜென் மார்டின் இசையமைத்துள்ள இத்திரைப்படம், முதல் நாளில் தெலுங்கில் ரூ.9 லட்சமும், தமிழில் ரூ.1.14 கோடியும் என இந்தியாவில் மொத்தம் ரூ.1.23 கோடி வசூலித்துள்ளது.
7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் மற்றும் விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு கிடைத்துள்ள வரவேற்பை அடுத்து திரையரங்குகளில் காட்சிகளின் எண்ணிக்கை உயர்த்தப்பட்டுள்ளது.