
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பின் தன்னிச்சையான வணிகக் கட்டுப்பாடுகள் மற்றும் இறக்குமதி வரி விதிப்புகளால் இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலைச் சமாளிக்க இந்தியா முயன்று வருகிறது.
பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2025 ஆகஸ்ட் முதல் குறைந்தபட்சம் 20 நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டு உறுதியான பொருளாதார மற்றும் ராஜதந்திர ஒப்பந்தங்களைப் பெற்று வருகிறார்.
அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய இருபெரும் வல்லரசுகளுக்கு இடையிலான மோதலில் சிக்காமல் இருக்க, பிரான்ஸ் மற்றும் கனடா போன்ற நடுத்தர வல்லரசுகளுடன் இந்தியா உறவை வலுப்படுத்தி வருகிறது.