
ஜப்பானில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் பெண்கள் ஹாக்கி 'பி' பிரிவு லீக் ஆட்டத்தில் இந்தியா 19-0 என்ற கோல் கணக்கில் உஸ்பெகிஸ்தான் அணியை வீழ்த்தி இமாலய வெற்றி பெற்றது.
இந்திய அணி தரப்பில் தீபிகா 8 கோல்களையும், இஷிகா சவுத்ரி 3 கோல்களையும் அடித்து அணியின் வெற்றிக்கு வித்திட்டனர்.
ஆண்களுக்கான 'ஏ' பிரிவு லீக் ஆட்டத்தில் இந்தியா 13-1 என்ற கோல் கணக்கில் இந்தோனேஷியா அணியை வீழ்த்தியதுடன், தில்பிரீத் சிங் 4 கோல்கள் அடித்து அசத்தினார்.