/nakkheeran/media/media_files/2026/09/26/19-2026-09-26-16-59-54.jpg)
சென்னையில் ரூ. 1,200 கோடி மதிப்பீட்டில் புதிய தலைமைச் செயலகம் பட்டினப்பாக்கத்தில் கட்டப்படும் என முதல்வர் ஜோசப் விஜய் அறிவித்திருந்த நிலையில், மீனவர்கள் மற்றும் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த எதிர்ப்பைத் தொடர்ந்து புதிய தலைமைச் செயலகம் அமைப்பதற்கான அரசாணையை முதல்வர் ரத்து செய்திருப்பதாகத் தகவல் வெளியான நிலையில், தற்போது வழக்கறிஞர் விஜய் ஆனந்த் தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
கடலோர ஒழுங்குமுறை மதிப்பீடு மற்றும் சுற்றுச்சூழல் ஆய்வுகள் மேற்கொள்ளாமல் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும், அப்பகுதியில் எந்த நடவடிக்கைகளும் மேற்கொள்ளக் கூடாது எனவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.