
மேற்காசிய நாடான ஏமனில் ஹவுதி பயங்கரவாதிகள் தொடர் தாக்குதல்களை நடத்தி வருவதால் சவுதி அரேபியாவில் பதற்றமான சூழல் நிலவுகிறது.
இதன் காரணமாக ஜெட்டா, ரியாத், தம்மாம் நகரங்களுக்குச் செல்லும் மற்றும் அங்கிருந்து இயக்கப்படும் ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான சேவைகள் நவம்பர் 14 வரை ரத்து செய்யப்பட்டுள்ளன.
பாதிக்கப்பட்ட பயணிகள் கட்டணமின்றி நவம்பர் 29 வரையிலான தேதிகளுக்குத் தங்கள் பயண மாற்றங்களைச் செய்துகொள்ளலாம் அல்லது முழுத் தொகையையும் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.